சினிமா செய்திகள்
உதயநிதியின் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில்: திமுகவினர் கொண்டாட்டம்!

நடிகர், தயாரிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி நடிக்கும் அடுத்த படத்துக்கு மாஸ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து திமுகவினர் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய உதயநிதி ஸ்டாலின் பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ’நெஞ்சுக்கு நீதி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் மு கருணாநிதி அவர்கள் எழுதிய ’நெஞ்சுக்கு நீதி’ என்ற நூல் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகியது என்பது ஒவ்வொரு திமுக தொண்டன் வீட்டிலும் அந்த நூல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புத்தகத்தின் டைட்டிலையே உதயநிதி ஸ்டாலினின் அடுத்த டைட்டிலாக வைக்கப்பட்டதை அடுத்து இந்த டைட்டில் மாஸ் ஆக இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர். யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன் மயில்சாமி ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.