சினிமா செய்திகள்
‘அண்ணாத்த’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழா? படக்குழு அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது என்பதும் இந்த டீசரை யூட்யூபில் மில்லியன் கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதை அடுத்து விறுவிறுப்பாக புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டீசரில் இருந்து ரஜினிகாந்த் மிகவும் இளமையாக காட்சி அளிப்பதாகவும் ஸ்டண்ட் மற்றும் ஆக்சன் காட்சிகள் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் பாடல் காட்சிகள் என அனைத்தும் இந்த படத்தில் சிறப்பாக வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சென்சார் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் படக்குழுவினரை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
யு சான்றிதழ் கிடைத்திருந்தால் மிகவும் சிறந்ததாக இருந்திருக்கும் என்பதே படக்குழுவினர் கருத்தாக உள்ளது. ஆனால் ஒருசில வன்முறை காட்சிகள் இருப்பதை அடுத்து சென்சார் அதிகாரிகள் ஊழியர்கள் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
#AnnaattheCensoredUA
Indha Deepavali summa saravedi dhan ????#AnnaattheDeepavali @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar @sooriofficial @actorsathish @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #Annaatthe pic.twitter.com/GBSXryndpH— Sun Pictures (@sunpictures) October 16, 2021




















