சினிமா
இந்த பொழப்பும் போச்சே.. டார்ச்லைட் நடிகை சதாவின் சோகக் கதை!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா லைவ் வீடியோவில் தனது தொழில் முடங்கி விட்டதாக கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
நடிகை சதா திடீரென அந்த வீடியோவில் எமோஷனலாகி அழுததை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

#image_title
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சதா கோலிவுட்டில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி, நான் அவள் அது, உன்னாலே உன்னாலே, புலி வேஷம், எலி மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்துள்ள இவர் கடைசியாக 2018ல் டார்ச்லைட் படத்தில் கால் கேர்ளாக நடித்த நிலையில், அதன் பின்னர் எழுந்த கடுமையான விமர்சனங்களால் சினிமாவை விட்டே அதிரடியாக விலகினார்.
மும்பையில் எர்த்லிங்ஸ் எனும் கஃபேரை ஆரம்பித்து நடத்தி வந்த இவர், தற்போது அந்த கடையை இந்த மாத இறுதியில் மூடப் போவதாக வீடியோ மூலம் அறிவித்து அழுதுள்ளார்.
அந்த இடத்தின் ஓனர் கடையை உடனடியாக காலி செய்ய சொல்லி விட்டார் என்றும் மும்பையில் மற்ற இடங்களில் கடையை வாடகைக்கு எடுக்க அதிக செலவு ஆகும் என்பதால் இந்த மாதத்துடன் கடையை மூடுகிறேன் எனக் கூறி தனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
View this post on Instagram