செய்திகள்
அம்பானியின் புதிய அறிவிப்பு: ஜியோ ஏர்ஃபைபர் இணைப்புடன் இலவச ப்ரீபெய்ட் திட்டம்!

அம்பானி தந்த Jio சர்ப்ரைஸ்.. இந்த திட்டம் போட்டா.. ஜியோவின் AirFiber கனெக்ஷன் இலவசமா? டிவிஸ்ட் வச்ச ஜியோ?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தற்போது தனது நெட்வொர்க்கில் இருந்து பிஎஸஎன்எல் மற்றும் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு தாவும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அப்படி, அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் நீண்ட நாள் ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) இணைப்புடன் இலவசமாக வழங்குகிறது. எந்த ஜியோ திட்டத்தை தேர்வு செய்தால் இந்த இலவச நன்மை கிடைக்குமென்று பார்க்கலாம்.
ஜியோவின் ஏர்ஃபைபர் சேவை பற்றி தெரியாதவர்களுக்கு, முதலில் இது என்ன மாதிரியான சேவை என்பதை தெரியப்படுத்திவிடுவோம். இந்த ஜியோ ஏர்ஃபைபர் சேவையானது பாரம்பரிய ஃபைபர் இணைப்புகளுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்ட 5G நிலையான-வயர்லெஸ் ஆக்ஸஸ் (FWA) சேவையாகும். இப்போது, Jio AirFiber இணைப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் கூடுதல் செலவின்றி வருடத்திற்கு ரூ.3599 செலவில் மொபைல் திட்டத்தைப் பெறலாம்.






















