வணிகம்
இந்தியாவில் தடை செய்த சீன நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த அம்பானியும் அவரது மகளும்!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரபலமான சீன ஃபேஷன் பிராண்ட் ஷீன் (Shein) ஐ மீண்டும் இந்திய சந்தையில் கொண்டு வர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் ஈஷா அம்பானி இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஷீனின் இந்திய வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு பகுதியாகும்.
2020 இல் இந்தியா-சீனா எல்லை மோதலுக்கு பிறகு, ஷீன் உட்பட பல சீன பயன்பாடுகள் மற்றும் பிராண்டுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. இப்போது, ரிலையன்ஸுடன் கூட்டு சேர்ந்து, ஷீன் மீண்டும் இந்திய சந்தையில் திரும்ப உள்ளது.
இந்த கூட்டு முயற்சி, இந்தியாவின் ஃபேஷன் மற்றும் ஈ-காமர்ஸ் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.























