வேலைவாய்ப்பு
“மாதம் ஊதியம் 50 ஆயிரம் முதல்” – இளம் நெறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்… இந்த தகுதிகள் போதும்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் நெறிஞர் (Young Professional) பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திட்ட செயலாக்க அலகிற்காக பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்ய, தரவுகளை சேகரித்து விளக்க காட்சிகள் மற்றும் கொள்கை விளக்கங்களை உருவாக்குவது போன்ற நோக்கங்களுடன் இளம் நெறிஞர் பதவி வழங்கப்படுகிறது.
இந்த பதவிக்கான தகுதிகள்:
- கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம்
- தரவு அறிவியல் (Data Science) மற்றும் புள்ளியியல் படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் முன்னுரிமை
- அரசின் பணியாளர் தேர்வு விதிமுறைகள் அடிப்படையில் நியமனம் நடைபெறும்.
இளம் நெறிஞருக்கு மாதம் ₹50,000/- ஊதியம் வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் 27.01.2025 அன்று அல்லது அதற்கு முன்னர் தங்களது விண்ணப்பங்களை புள்ளியியல் துணை மாவட்ட புள்ளியியல் அலுவலகம், போஸ் நகர், புதுக்கோட்டை 622001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பலாம். மேலும், விரிவான தகவல்களை புதுக்கோட்டை மாவட்ட இணையதளத்தில் https://pudukkottai.nic.in பதிவிறக்கம் செய்யலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

6 ஆண்டுகளில் 5 பதவி உயர்வு! IT நிறுவன பெண் கூறும் 2 முக்கிய விதிகள்

சென்னையில் அரசு அலுவலக வேலைவாய்ப்பு – தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

புதன் மிதுன ராசியில் உதயம்! கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிக்காரர்களும் இவர்கள்தான்!

சென்னை ஐஐடி-யில் ரூ.30,000 சம்பளத்தில் நிர்வாக வேலை! இன்றே விண்ணப்பிக்குங்கள்!

TNSTC 3274 பணியிடங்கள் – அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு!

ரூ.1,05,000/- ஊதியத்தில் பவர்கிரிட் (PGCIL) ஆணையத்தில் வேலைவாய்ப்பு!



















