வேலைவாய்ப்பு
சென்னையில் அரசு அலுவலக வேலைவாய்ப்பு – தகவல் பகுப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – முக்கிய அறிவிப்பு:
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், ஒப்பந்த அடிப்படையில் தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படுகின்ற துறையாகும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
புள்ளியியல் / கணிதவியல் / பொருளாதாரம் / கணினி அறிவியல் (BCA) ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் பணியாற்றும் திறமை அவசியம்.
அனுபவம் உள்ளவர்கள் தேர்வில் முன்னுரிமை பெறுவர்.
வயது வரம்பு: 42 ஆண்டுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை https://chennai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம், புகைப்படம், சான்றிதழ்கள், ஆகியவை இணைத்து,
15 நாட்களுக்குள் மாலை 5:45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அஞ்சல்/நேரில் அனுப்ப வேண்டும்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
சென்னை தெற்கு, எண்:1, புதுத்தெரு,
GCC வணிக வளாகம், முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016
(RTO Office அருகில்)
👩💼 தேர்வு மற்றும் நியமனம்:
தேர்வு நேர்முகத் தேர்வு (Interview) மூலம் நடைபெறும்.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
நியமனம் செய்யப்படும் நபர், காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் (Police Verification) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அரசின் முடிவே இறுதியானதாகும்.









