இந்தியா
பிரதமர் மோடி – மோகன்லால் சந்திப்பு.. பாஜகவின் முதல்வர் வேட்பாளரா?

திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பாஜகவில் சேர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். பல முக்கிய விஷயங்களை இதில் அவர்கள் பேசினார்கள்.

பாஜகவிற்கு தமிழகம் போலவே கேரளாவிலும் பெரிய பலம் இல்லை. கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலுக்காக மோகன்லால் களமிறங்க வாய்ப்புள்ளது.
மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்ததை அடுத்து அவர், பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.மோகன்லாலுக்கு பெரிய ரசிர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.










