Connect with us

சினிமா

7 வருடங்களாகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் Mirzapur வெப்சீரிஸ் – ரவுடி அரசியல், அதிரடி ட்விஸ்ட்!

Published

on

அமேசான் ப்ரைமில் 2018-ல் வெளியான ‘மிர்சாபூர்’ (Mirzapur) வெப்சீரிஸ், 7 ஆண்டுகள் ஆனபோதும் இன்றும் ஓடிடி ப்ளாட்பாரங்களில் ட்ரெண்டிங்கில் நீடிக்கிறது. இது வெறும் வெப்சீரிஸ் அல்ல, ரத்தமும் சதையுமாகக் காட்சியளிக்கும் ஒரு ரவுடி அரசியல் நிழல் உலக பயணமாக இருக்கிறது.

இந்த தொடரின் மையக் கதை, உத்தரபிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் பகுதியில் பதவியை பிடிக்க டான் அகண்டானந்தை (பங்கஜ் திரிபாதி) வீழ்த்தும் முயற்சியைச் சுற்றி நகர்கிறது. பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், விக்ராந்த் மெஸ்ஸி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று சீசன்கள் வெளியாகி உள்ள நிலையில், ஒவ்வொரு சீசனும் அதிரடி சம்பவங்கள், கொலைகள், அதிகார மோதல்கள் மற்றும் அழுத்தமான ட்விஸ்ட் மற்றும் கிளைமாக்ஸ் கொண்டவையாக உருவாகியுள்ளன. இந்த வெப்சீரிஸ் மும்பையின் தாதா வாழ்க்கை, ரவுடியிசம், அரசியல் சதிகள் என பல தளங்களில் பயணிக்கிறது.

இந்த தொடரின் முதல் சீசனில் திவ்யா ஷர்மா, ஸ்வேதா திரிபாதி, ஷ்ரியா பில்கோன்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இரண்டாம் சீசனில் விஜய் வர்மா, இஷா தல்வார், லில்லிபுட், பிரியான்ஷு பைன்யுலி உள்ளிட்ட பல புதிய நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இந்த தொடர் முழுவதும் உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் – மிர்சாபூர், ஜான்பூர், லக்னோ, ரேபரேலி, வாரணாசி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று சீசன்களும் Amazon Prime Video-வில் நேரில் காணக்கிடைக்கின்றன.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Explore business tools →.