சினிமா செய்திகள்
100 மில்லியன் பார்வையாளர்கள்; வாத்தி கம்மிங் செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை குவித்தது என்பதும் தெரிந்ததே.
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியான பத்தே நாட்களில் இந்த படம் 200 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 16-வது நாளில் திடீரென ஓடிடியில் ரிலீசாகி அதிலும் வசூலை வாரி குவித்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் 100 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பது தெரிந்ததே. அனிருத்தின் இசையமைப்பில் உருவாகிய இந்த பாடல்களில் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ’வாத்தி கம்மிங்’ பாடல் ஒரு புதிய சாதனையை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு 100 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் கிடைத்துள்ளனர். ஒரு தமிழ் திரைப்பட பாடலுக்கு, பாடல் வெளிவந்து ஒரு சில நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனை அடுத்து இந்திய அளவில் இது குறித்த ஹேஷ்டேக் முதலிடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
STORMING INTO THE 1️⃣0️⃣0️⃣MILLION CLUB! ????
TRULY A MOMENTOUS OCCASION! ????????#VaathiComingHits100MViews
➡️ https://t.co/6WTC8om8SU#Thalapathy @anirudhofficial @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr @7screenstudio #Master #VaathiComing pic.twitter.com/8JlZWUFFJ6
— Sony Music South (@SonyMusicSouth) March 21, 2021














