சினிமா செய்திகள்
பிஎம்டபிள்யூ கார் வாங்கிய மணிமேகலை: வைரல் புகைப்படங்கள்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ம்ணிமேகலை, மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்பது தெரிந்ததே.
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை புகழ்பெற்றதற்கு அவரும் மணிமேகலை ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய காமெடி சீன்ஸ் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதும் குறிப்பாக அவர் அஸ்வினிடம் வம்புக்கு இழுக்கும் காட்சிகள் எல்லாம் சுவராசியமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணிமேகலை தற்போது புதிய கார் வாங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி நேரத்தில் தான் நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்று கனவு கண்டிருந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருப்பதாகவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கார் மற்றும் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மணிமேகலை புதிய கார் வாங்கி உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hussain Manimegalai ‘s Very Own BRAND NEW BMW X1 ????????
சொந்த முயற்சியில் adutha Achievement ????
Fav & Dream CAR ????
Arrived on Auspicious Vinayagar chathurthi Day ????Sri Rama Jayam
Mashallah ????#NewArrival #NewCar #BMW pic.twitter.com/kEx4dGVPqO— MANIMEGALAI (@iamManimegalai) September 10, 2021


















