டிவி
‘மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா?- புகழ் கொடுத்த பதில்!

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்விக்கு புகழ் பதில் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் மணிமேகலை கோமாளியாக கடந்த மூன்று சீசன்களா இருந்து வருகிறார். நிகழ்ச்சியில் அவரது சேட்டைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இப்பொழுது ‘குக் வித் கோமாளி’யின் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்த நிலையில் திடீரென்று இந்த சீசனில் இருந்து விலகுவதாக மணிமேகலை தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு என்ன காரணம் என்பதை அவர் இன்னும் சொல்லாத நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
மணிமேகலை சிறந்த பெண் கோமாளி. நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியது தனக்கு வருத்தம் தருவதாகவும் செஃப் வெங்கட் பட் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மணிமேகலை விலகியதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
சமீபத்தில் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட புகழிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்திருப்பதாவது, ‘மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என்று அவரே தெரிவிப்பார்.
அது அவருடைய பர்சனல். கர்ப்பமாக இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது அப்படி இருந்தால் அது எல்லாருக்குமே சந்தோஷம்தான். ஆனால் அதை மணிமேகலை சொல்லாமல், இந்த காரணமாக இருக்குமா? அதுவாக இருக்குமா? என நாமே ஒரு காரணத்தை, செய்தியை பரப்புவது சரியாக இருக்காது. அதனால் மேற்கொண்டு அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எதனால் விலகினார் என நிச்சயம் மணிமேகலையே தெரிவிப்பார்’ என புகழ் தெரிவித்துள்ளார்.