Connect with us

இந்தியா

25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபரை கண்டுபிடிக்க உதவிய சமூக வலைத்தளங்கள்: ஆச்சரிய தகவல்

Published

on

25 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த நபர் சமூக வலைதளத்தில் உதவியால் தற்போது குடும்பத்துடன் இணைந்து உள்ள ஆச்சரியமான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர மௌரியா என்பவர் திருவிழா ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார். அவர் பேச்சு குறைபாடு உள்ளவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொலைந்து போன அவரை கடந்த பல ஆண்டுகளாக அவரது குடும்பத்தினர் தேடியும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. அவரது கையில் இருந்த டாட்டூ ஒன்று தான் அவரை அடையாளம் காண உதவும் ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் தொலைந்து போன ஜிதேந்திரா அமேதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. டாட்டுவுடன் ஜிதேந்திரா இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அமேதி சேர்ந்து பார்த்த போது அங்கு அவர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது.

ஆனால் மீண்டும் ஜிதேந்திரா மற்றொரு நகரில் இருப்பதாக மற்றொரு சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வந்தபோது அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவரைக் கண்டு பிடித்தனர். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் மாமாவை கண்டுபிடித்தது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கும் என அவரது உறவினர் சந்திரசேகர் என்பவர் தெரிவித்துள்ளார். தனது உறவினர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை ஜிதேந்திரா கட்டிப்பிடித்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்த ஒரு நபர் சமூக ஊடகத்தில் வெளியான ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?