இந்தியா
டாடா, மஹிந்திரா உள்பட இந்தியாவில் இனி இந்த 17 மாடல் கார்களை ஓட்ட முடியாது: புதிய விதி அமல்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும், கார்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை உச்சத்திற்கு சென்று வருவதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் 17 வகை கார்களை வரும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் இயக்க முடியாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வாகனங்களுக்கு புதிய உமிழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இந்த விதி அமலுக்கு வந்தவுடன், பல நிறுவனங்கள் தங்கள் டீசல் வாகனங்களை நிறுத்தப் போவதாகவும், அதுமட்டுமின்றி பெட்ரோல் கார்களிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய விதியின் காரணமாக இந்த 17 வகை மாடல் கார்கள் ஏப்ரல் 2023 முதல் இயங்க அனுமதிக்கப்படாது, இந்தியாவில் இந்த புதிய விதி அமலுக்கு வந்தவுடன் ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, டொயோட்டா உள்பட பல நிறுவனங்கள் தங்கள் டீசல் வாகனங்களை நிறுத்தப் போவதாகவும், அதேபோல் பெட்ரோல் கார்களிலும் சில மாற்றங்களைச் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.
17 வகை கார்களின் உமிழ்வு அளவு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டதில் இந்த வாகனங்கள் உமிழ்வு அளவு அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டது. எனவே சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இந்த கார்களின் பயன்பாடுகள் நிறுத்தப்படவுள்ளன.
மேலும் உமிழ்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய, வாகனங்களில் ஒரு சாதனம் பொருத்தப்பட வேண்டும் என்றும், வாகனங்கள் நகரும் வாகனத்தின் மாசு அளவை அந்த சாதனம் கண்காணிக்கும் என்றும் புதிய விதியில் ஒரு அம்சமாக கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் பொருத்தப்பட்டால் கார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி செலவு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
2023 ஏப்ரல் முதல் பயன்பாட்டை நிறுத்தும் 17 கார்களின் பட்டியல் இதோ: