இந்தியா
ஸ்கேன் எடுத்த நடிகையை செல்போனில் படம் பிடித்த மர்ம நபர்: போலீசில் புகார்

நடிகை நவ்நீத் ராணா தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்த போது அவரை மர்ம நபர் ஒருவர் புகைப்படம் எடுத்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது .
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி பகுதியைச் சேர்ந்த எம்பி நவ்நீத், பிரபல நடிகையாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நவ்நீத் மற்றும் அவரது கணவர் ரானா முதலமைச்சர் உத்தவ்தேவ் தாக்கரே வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டார் என்பதும் தற்போது அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜாமினில் விடுதலையான நடிகை நவ்நீத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து நவ்நீத் ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுக்க அப்போது மர்ம நபர் ஒருவர் நடிகையை செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்கேன் சென்டரில் உள்ள ஊழியர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்கேன் சென்டரில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.