சினிமா செய்திகள்
அட்டகாசமான அஜித்தின் குடும்ப புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

அஜித்தின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி 200 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61 என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது .
இந்த படத்திற்காக சென்னை அண்ணா சாலை செட் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போனிகபூர் தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் வெகு அரிதாகவே இணையதளத்தில் வைரலாகும் நிலையில் தற்போது திடீரென அஜித்தின் குடும்பப்படம் வைரலாகி வருகிறது.
அஜித், அவருடைய மகள் அனுஷ்கா, மகன் ஆத்விக், மனைவி ஷாலினி ஆகியோர் இந்த புகைப்படங்களில் உள்ளனர். சமீபத்தில் அஜித் குடும்பத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.


















