உலகம்
வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன்: காரணம் கூகுள் மேப்

கூகுள் மேப் வழிகாட்டுதல் மூலம் திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகன் வேறொரு திருமண மண்டபத்திற்கு மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அவர் திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்திற்கு செல்வதற்காக கூகுள் மேப் மூலம் வழியை பார்த்து கொண்டு அதன் மூலம் அவர் காரில் சென்று கொண்டிருந்தார்., அப்போது ஒரு மண்டபத்தை கூகுள் மேப் காட்டியது. உடனடியாக அவர் இறங்கி மண்டபத்தின் உள்ளே சென்றபோது அங்கு வேறொரு மணமகள் மண மேடையில் உட்கார்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின்னர்தான் கூகுள் மேப் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு அவரை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கிருந்த மணமகன், மணமகள் உள்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் சரியான பாதையை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு சரியான மண்டபத்திற்கு சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த மணமகள் குடும்பத்தினர் மணமகன் வருகையை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் அவரது திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
கூகுள் மேப்பில் வழி தவறி சென்று வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மணமகனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூகுள் மேப் பெரும்பாலும் சரியான வழியை தேடி கொடுத்தாலும் ஒரு சில முறை இது போன்ற தவறான பாதையை காட்டுவதால் குழப்பம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


















