உலகம்
1 பில்லியன் நஷ்ட ஈடு தராவிட்டால் எவர்க்ரீன் கப்பலை விடமாட்டோம்: எகிப்து அதிகாரிகள் பிடிவாதம்!

சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து நெதர்லாந்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஒரு வாரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த கப்பல் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியது காரணமாக சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதனை அடுத்து ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என எவர்கிரீன் கப்பலின் நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து எவர்க்ரீன் கப்பலை எகிப்து அதிகாரிகள் பிடித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு தராமல் கப்பலை விடமாட்டோம் என எகிப்து அதிகாரிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் இரு தரப்பினருக்கும் தற்போது சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை எவர்கிரீன் கப்பல் நிர்வாகம் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.