சினிமா செய்திகள்
பிக்பாஸ் சாண்டிக்கு ஆண் குழந்தை: வாழ்த்தும் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரையுலகின் பிரபல நடன இயக்குனருமான சாண்டிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது குழந்தையின் கை தனது விரலை பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் போட்டியாளர் சாண்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சில்வியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சாண்டி-சில்வியா தம்பதிக்கு ஏற்கனவே என்ற பெண் குழந்தை உள்ளது என்பதும் சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இந்த பெண் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சாண்டியின் மனைவி கர்ப்பமாக இருந்ததை அடுத்து சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்ததை அடுத்து சாண்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ’எங்கள் வீட்டின் ராஜா பிறந்துள்ளார் என்றும் எனது கண்ணம்மாவுக்கு எனது அன்புகள் என்றும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை திரைப்படங்களுக்கு நடனம் மட்டுமே அமைத்துக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், 3:33 என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தை சந்துரு என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




















