Connect with us

செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்: வீடு தேடி வரும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்!

Published

on

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி வருகிறார்கள்! முதலமைச்சரின் மிகப் பெரிய அறிவிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இன்னும் விண்ணப்பிக்காத தகுதியான பெண்களுக்கு மிக முக்கியமான செய்தியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இனிமேல் நீங்கள் விண்ணப்பிக்காமலிருந்தால் கூட கவலை வேண்டாம். உங்கள் வீடு தேடி வருகிறார்கள்!

ஜூலை 15 முதல் அக்டோபர் மாதம் வரை, தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் ஊடாக, இதுவரை விண்ணப்பிக்காத பெண்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும், தகுதி உள்ளவர்கள் திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும், என்ன ஆவணங்கள் தேவை, தகுதி வரம்புகள் என்ன என்பதனை தன்னார்வலர்கள் நேரடியாக உங்கள் வீடுகளுக்கே வந்து விளக்குவார்கள்.

இதனால், பல இடங்களில் வழிகாட்டுதல் இல்லாமலே விண்ணப்பிக்க முடியாத பெண்கள் இப்போது திட்டத்தில் சேரும் வாய்ப்பு பெறுகிறார்கள்.

விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பு, ஏழை மற்றும் கிராமப்புற மகளிருக்கு மிகவும் பேரிழைச்சியாய் அமையும். பெண்கள் தங்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதி செய்ய இது முக்கிய அடையாளமாக அமைக்கிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Nhựa pvc cửa.