Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் எப்போது?

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் எப்போது? முக்கிய அப்டேட்

தமிழக மகளிருக்கு பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) புதிய விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

மாதந்தோறும் ₹1,000 வழங்கும் இந்த திட்டம், 1.15 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு செலுத்துகிறது. இதன் மூலம் பெண்கள் மகிழ்ச்சி பெறுவதுடன், அரசு மீதும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் வரை 17 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். நவம்பர் மாதம் வரை புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. புதிய விண்ணப்பங்களின் பரிசீலனை மற்றும் கள ஆய்வுகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

கள ஆய்வு மற்றும் வங்கி விவரங்களை பரிசீலித்த பிறகு பயனாளிகள் இறுதி செய்யப்படுவர். அரசு தெரிவித்துள்ளப்படி, மனுக்கள் 45 நாட்களுக்குள் நடவடிக்கை பெறும் என மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்கள் எதிர்பார்க்கலாம்.

துணை முதலமைச்சர் கூறியுள்ளதாவது, விரைவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். செப்டம்பர் 15 தேதி முக்கிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.