இந்தியா
திரைப்பட ஹீரோ போல ஸ்டண்ட் செய்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

திரைப்படங்களில் ஹீரோக்கள் ஸ்டட் செய்வதை பார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சிரிப்பு வந்துவிடும். அதுவும் போலீஸ் ஸ்டோரி என்றால் ஹீரோக்கள் பேசும் வசனங்களும், ஸ்டண்ட் காட்சிகளுக்கு அளவே இருக்காது.
இப்படி பாலிவுட் படங்களில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் பார்த்து முயற்சி செய்த, காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இயங்கிக் கொண்டு இரண்டு கார்களின் மீது ஏறி, இரண்டு கார்களின் மீது ஒரு கால்களை வைத்து ஸ்டண்ட் செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஊரடங்கு காலத்தில் போலீஸ் சீருடையில் இப்படி ஸ்டண்ட் செய்ததை பார்த்த காவல் துறை உயர் அதிகாரிகள் அவரை பணி இடைநீக்கம் செய்தனர்.
பணியிடை நீக்கம் செய்தது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிமீறல்களை மீறிய காரணத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.