இந்தியா
ரேஷன் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு!

ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொலி ரேஷன் இருப்பதை தடுக்க அதை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதார் எண்ணுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டால், ஒருவர் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை பயன்படுத்த முடியாது. போலி கார்டுகள் குறைக்கப்படும். எனவே ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

















