தமிழ்நாடு
அடிதூள்.. இதுதான் முக்கியம்.. 9 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை; பெண் காவலர்களுக்கான முக்கியமான 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் காவலர்கள் பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டதன் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கியயமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதில்,
- இனி பெண் காவலர்கள் ரோல் கால் செய்ய காலை 7 மணிக்கு வர வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்படும்.
3. காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை அவர்களுக்கு அளிக்கப்படும்.
4. காவல் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்படும். பெண் காவலர்கள் குழந்தை பெற்றாலும் அந்த குழந்தைகளை பாதுகாக்க வசதியாக இந்த வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு உள்ளது.
5. கலைஞர் காவல் கோப்பை விருது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் பெண் காவலர்களுக்கு இந்த பரிசு அளிக்கப்படும்.
6. குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் வழங்கப்படும். இதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை.
7. பெண்களுக்கு தனி துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடத்தப்படும். முறையாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இவர்களுக்கு என்று போட்டிகள் நடத்தப்படும்.
8. பெண் காவலர்களுக்கு தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும். இதன் மூலம் அவர்கள் பேசி ஆலோசனைகளை செய்ய முடியும்.
9. பெண் காவலர்களுக்கு என்று பணி ஆலோசனை குழு அமைக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.