சினிமா செய்திகள்
எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது: மாதவனின் ‘ராக்கெட்டரி’ டிரைலர்

மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இன்று இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இரண்டு நிமிடத்திற்கும் அதிகமாக உள்ள இந்த டிரைலரில் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்ட காட்சிகள் பலவும் உள்ளன. ஒரு தனிமனிதனுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஒரு நாட்டிற்கே துரோகமாக மாறிவிடும் என்ற வசனத்துடன் முடியும் இந்த ட்ரெய்லர் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று உள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவன் வாழ்க்கையை சிதறடிக்க வேண்டும் என்றால் அவனுக்கு தேசத்துரோகம் என்ற பட்டம் கட்டி விட்டால் போதும் என்று சூர்யா பேசும் வசனம் இன்றைய அரசியலுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவன், சிம்ரன், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்த இந்த இப்படத்தை மாதவனே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் சிஎஸ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ் இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டது என்பதும் மற்ற ஒரு சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.