சினிமா
‘சூர்யா 42’ புரோமோ ஷூட்: அப்டேட் தந்த படக்குழு!

‘சூர்யா 42’ புரோமோ ஷூட் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.
’சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்தத் திரைப்படம் 3டியில் வெளியாக இருக்கிறது. ஐந்து வித்தியாசமான தோற்றங்களில் நடிகர் சூர்யா இதில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா எனப் பல இடங்களில் நடந்து வருகிறது.
திஷா பட்டானி நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கடந்த வாரத்தில் ‘சூர்யா 42’ டைட்டில் புரோமோ அடுத்த ஏப்ரல் மாதத்தில் 14ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. அதற்கான புரோமோ ஷூட் தற்போது முடிந்திருப்பதை படக்குழு தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ஒப்பனைக் கலைஞர் ரஞ்சித் இந்த செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
’சூர்யா 42’ படத்தை முடித்து விட்டு நடிகர் சூர்யா அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல், ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல், சுதா கொங்கரா இவர்களது இயக்கத்தில் படங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.