இந்தியா
ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் மது பானம் கடைகள், முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி!

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை என மத்திய அரசு பிரித்ததை அடுத்து, ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

புதிய விலக்குகளின் படி மே 4-ம் தேதி முதல் ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் முடி திருத்தகங்கள், சலூன்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அத்தியாவசியம் இல்லா பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேவைகள் சிவப்பு மண்டலங்களில் கிடைக்காது.
மதுபான கடைகள்

மால்கள் அல்லாத தனியாக உள்ள மதுபானக் கடைகளில் மட்டும் மது சிவப்பு, மஞ்சள், பச்சை என அனைத்து மண்டலங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




















