இந்தியா
அமைச்சருக்கு அரசியல் மேடையிலேயே முடித் திருத்தம்.. நடந்தது என்ன?

முடி திருத்தும் கடை வைக்க நிதியுதவி கேட்டவருக்கு, நிகழ்ச்சி மேடையிலேயே அமைச்சருக்கு முடி திருத்தம் செய்யும் காட்சி நடந்தேறியது.
மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள குஜமால் பகுதியில், அம்மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா நிகழ்ச்சி ஒன்றுக்காகச் சென்று இருந்தார்.
அப்போது அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ரோஹிதாஸ் என்பவர், தான் ஒரு முடி வெட்டும் தொழிலாளி, தனக்குச் சொந்தமாகக் கடை வைக்க நிதியுதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்ற அமைச்சர், பணத்தை உடனே கொடுக்க முடியாது. எனக்கு இப்போது முடி திருத்தம் செய். அதில் திருப்தி ஏற்பட்டால் நான் நிதியுதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
உடனே அந்த நபரும், நிகழ்ச்சி மேடையில் அனைவரின் முன்பும் முடி திருத்தம் செய்தார். அமைச்சருக்குப் பிடித்துப்போக அந்த மேடையிலேயே முடி திருத்தம் செய்ய 60 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


















