இந்தியா
காஷ்மீரில் பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் துப்பாக்கிச்சண்டை… கர்னல், மேஜர் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில், பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 நபர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, இராணுவத்துக்குக் கிடைத்த தகவலின் படி அந்த பகுதி சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
அதில் இரண்டு பயங்கரவாதிகள், இராணுவ கர்னல், மேஜர் என 5 நபர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தும் முன்பு ஹந்த்வாராவின் சங்கிமுல்லா பகுதியில் நுழைந்து குடிமக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய பின் தான் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சுடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.












