Connect with us

இந்தியா

தென்னகத்து காஷ்மீர்.. கடவுளின் பூமியில் குட்டி காஷ்மீர் : காந்தலூர் போலாம் வாங்க…

Published

on

ரொம்ப தூரம்லாம் இல்லங்க… உடுமலைப்பேட்டையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில், கோயம்பத்தூரில் இருந்து உடுமலை வழியாக மறையூர் சென்று அங்கிருந்து காந்தலூரை அடையலாம், 128 கிலோ மீட்டர் தொலைவு, மூணாரில் இருந்து 48 கிலோ மீட்டரும், தொலைவில் உள்ளது , இந்த அடம் தமிழகமும் கேரளமும் சந்திக்கம் இடத்தில் உள்ளது.

வரலாற்று கதைப் பிரியர்களுக்கு இந்த இடம் ஏற்கனவே அறிமுகமாயிருக்கும். தென்னகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் அரசரின் படைகளில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் இளைஞர்களும் ஏற்கனவே போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் புதிய புதிய போர்த் தந்திரங்களை பயிற்றுவிக்க உருவாக்கப்பட்டதே காந்தளுர் கடிகைச்சாலை. இங்கு போர்ப் பயிற்சிகள் மட்டுமல்ல போரில் காயமடைந்த வீரர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் இங்கு பயிற்றுவிக்கப்பட்டதாக கூறுவார்கள். கிட்டத்தட்ட இதேபோல் இந்த இடத்திற்கு செல்லும் வழியில்தான் அமராவதி நகர் சைனிக் ஸ்கூல் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

குட்டி காஷ்மீர் போல் இருக்கும் இந்த ஊரில் வாழும் 90 சதவீதம் பேர் தமிழர்கள் தான், இந்த ஊரை ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ என்றே சொல்லலாம்., 12 வருடத்திற்கு ஒரு முறையே பூக்கக்கூடிய நீலக்குறிஞ்சி மலருக்கும் இவ்விடம் பிரசித்தி பெற்றதாகும். தென் இந்தியாவில் ஆப்பிள் விளைவிக்கும் ஒரே இடம் காந்தலூர் மட்டுமேயாகும். அது மட்டுமில்லால் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்ச், பிளம்ஸ், நெல்லிக்காய், பீச் போன்ற பழங்கள் விளைகின்றது,

ஆனைமுடி சோலை தேசிய பூங்கா அல்லது மன்னவன் சோழா என்று அழைக்கப்படும் பசுமைமாறக்காடு இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பட்டிச்சேரி அணை, குலச்சிவயல் பாறை, கீழந்தூர் அருவி, இரச்சில்பாறை அருவி மற்றும் ராமர் குகைக்கோவில் பிரசித்தி பெற்ற இடங்கள், மறையூரிலுள்ள சந்தன மரத் தோட்டங்கள் மிக பிரசித்தமானவை.

ஆர்கானிக் காய்கறி வகைகளான பிரக்கோலி, தக்காளி, முட்டைகோஸ், காலிப்பிளவர், கேரட், பீன்ஸ் போன்றவையும் பயிரிடப்படுகின்றது. இங்கே இருக்கும் பூண்டு அதன் சுவைக்காக பெயர் போனதாகும்.  இந்த பூண்டிலிருந்து தலைவலி சளி காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்த இங்கு ஒரு தைலம் தயாரித்து விற்கப்படுகிறது. இவ்விடத்தை ‘கேரளாவின் ஆப்பிள் கிராமம்’ என்று அழைப்பார்கள்.

இரச்சில்பாறை அருவி கோவில்கடவு என்னும் இடத்தில் இருக்கிறது. இந்த அருவியிலிருந்து தண்ணீர் 300 அடி உயரத்திலிருந்து வந்து விழுகிறது. இந்த அருவியில் குளிப்பது மழையிலே குளித்த அதே உணர்வை கொடுக்கும். இங்கே வருவது நம் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் Miss பண்ணிராதீங்க…

இங்கு நிறைய வியூ பாயிண்ட்கள் உள்ளன. அது மட்டும் அல்லாமல் பெயர் தெரியாத பல அருவிகள் ஆங்காங்கே கொட்டுகின்றன. காந்தளூரின் அழகை காண நினைப்பவர்கள் டென்ட் ஸ்டே என சொல்லப்படும் கூடார அமைப்புகளில் தங்குவது நல்ல அனுபவத்தை அளிக்கும். இவை வாடகைக்கு கிடைக்கின்றன.

ஜீப் பயணங்கள் இங்கே அழகு, ஓர் இரவு குடும்பத்துடன் தங்கி மகிழ அழகிய ஊரு இந்த காந்தலூர்…

இங்கிருந்து மூணாறு என்கிற மலைவாழ் சுற்றுலாத் தலம் 48 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. அங்கு ஏராளமான காப்பித் தேயிலைத் தோட்டங்களும் நீர்வீழ்ச்சிகளும் ஆணைமுடி சிகரமும் படகு குழாம்களும் சூழல் சுற்றுலா செல்ல ஏற்றதாக இருக்கின்றன.

ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்களை விரும்பும் சுற்றுலா ஆர்வலர்களுக்கு காட்சிக்கு இனிய விருந்தாக இருக்கும்.

தவறாமல் ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்…

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா9 minutes ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. Built for vehicles needing jump starts, lockout help, fuel delivery or tire assistance across the dallas fort worth area.. run emigration names.