இந்தியா
2 நாட்களாக மலையிடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு!

கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில் உள்ள செங்குத்தான மலையில் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென இடறி விழுந்து மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்பதற்காக கேரளாவைச் சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் பெரும் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை அடுத்து கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்க முயற்சித்தது. இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் ராணுவம் அந்த இளைஞரை மீட்க உதவி செய்ய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு நாட்களாக சிக்கித் தவித்த அந்த இளைஞரை ராணுவ வீரர்கள் மீட்டனர்.
இதனை அடுத்து ராணுவ வீரர்களுக்கு இளைஞர் பாபு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Army ❤️????#IndianArmy @adgpi pic.twitter.com/gXznsTYHDS
— unni (@unnirajendran_) February 9, 2022


















