இந்தியா
பிகினி, ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை: பிரியங்கா காந்தி

பிகினி அல்லது ஹிஜாப் எந்த உடை அணிவது என்பது பெண்களின் உரிமை என்றும் அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மக்களவை வரை பேசுபொருள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா உள்பட பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி குறித்து கூறிய போது, ‘பெண்கள் ஹிஜாப், ஜீன்ஸ், பிகினி உள்பட எந்த உடை அணிவது என்பது முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் இந்திய அரசியலமைப்பு அந்த உரிமையை பாதுகாக்கின்றது என்றும் எனவே பெண்களின் உடையை காரணம்காட்டி துன்புறுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த டுவிட்டர் தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த டுவிட்டருக்கு பதிலளித்துள்ள பாஜகவின் காயத்ரி ரகுராம், ‘பெண்களின் உடை உரிமை என்பது பொதுவெளியில், மாலில், பீச், பார்க் செல்லும்போது வைத்துக் கொள்ளலாம் ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் போது பள்ளி கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Whether it is a bikini, a ghoonghat, a pair of jeans or a hijab, it is a woman’s right to decide what she wants to wear.
This right is GUARANTEED by the Indian constitution. Stop harassing women. #ladkihoonladsaktihoon
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 9, 2022


















