Connect with us

தமிழ்நாடு

பிரிட்ஜில் குழந்தை பலி: பெரும் சோகம்

Published

on

கேரள மாநிலத்தில் பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை ஒன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதி அருகே குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் அலல். இவரது மனைவி ஸ்ருதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ரூட் மரியம் அலல் என்ற குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று குழந்தை ரூட் மரியம் அலல் ஒளிந்து விளையாடுவதற்காக வீட்டில் இருந்த பிரிட்ஜ் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது பிரிட்ஜில் இருந்த மின்சாரம் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தையை தாக்கியதை அடுத்து குழந்தை தூக்கி வீசப்பட்டது.

இதனால் படுகாயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடியதால், மின்சார கசிவு காரணமாக ஒன்றரை வயது குழந்தை பலியானதை அடுத்து அதன் பெற்றோர்கள் கதறி துடித்தது காண்போரை கண்ணீர் வரவழைக்கும் வகையில் சோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
scale your rankings with free backlinks & website citations.