சினிமா செய்திகள்
பாலிவுட் படத்தில் டபுள் ரோலில் கீர்த்தி சுரேஷ்!

பாலிவுட்டில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ், முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் அப்துல் இப்ராஹிமின் பயோபிக்கில், அஜய்தேவ்கன் நடிக்க உள்ளார். அந்த படத்தில், இளம் வயது மற்றும் சற்று முதிய தோற்றத்திலும், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளராம்.
நடிகையர் திலகம் படத்திற்காக பிராஸ்தெடிக் மேக்கப் போட்டது போல, இந்த படத்தில், போடாமல், தனது நடிப்பாலே வித்தியாசம் காட்டப் போகிறாராம் கீர்த்தி சுரேஷ். தல அஜித்தின் நேர்கொண்ட பார்வையை தயாரிக்கும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.



















