சினிமா செய்திகள்
அரசியலில் நாம தலையிடணும்.. இல்ல.. அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்!
இளம் இயக்குநர் விஜய் குமார் இயக்கி நடித்த உறியடி படம், மாபெரும் வெற்றி பெற்றது மேலும், விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களை பெற்றது.
கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையில், ஜாதி அரசியல் எப்படி தலையிடுகிறது. அதனால், பாதிக்கப்படும் இளைஞர்கள் என்ன ஆனார்கள்? என்ற கதைக் களத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்து வெற்றி பெற்றார்.
அவரது உறியடி படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சூர்யா, தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உறியடி 2 படத்தை தயாரித்துள்ளார்.
உறியடி 2 படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல் படத்தில் சொன்னதை விட தீவிர அரசியல் கருத்துக்களை இந்த படத்தில் படமாக்கியுள்ளார் விஜயகுமார் என்பது டீஸரிலேயே தெரிகிறது.












