உலகம்
மாதம் ரூ.1 கோடி சம்பாதிக்கும் இளம்பெண்: காரணம் மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் தான்!

ஆன்லைன் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸெல் சொல்லிக் கொடுத்து மாதம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கேட் நார்டன் என்ற 27 வயது பெண்மணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்ததால் மீதமுள்ள நேரத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதை அடுத்து தனக்கு தனக்கு மைக்ரோசாப்ட் எக்ஸெல்லை எளிய வழிமுறைகளை கொண்டு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் வீடியோவாக பகிர்ந்தார்.
அவர் சொல்லிக் கொடுக்கும் முறை தான் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸெல் என்பது மிகவும் நுட்பமானது சிறப்பானதுமாக இருக்கும் நிலையில் அவர் அந்த நுணுக்கங்களை மிகவும் விளையாட்டுத்தனமாக ஜாலியாக சொல்லித்தந்தார். பாட்டு பாடி டான்ஸ் ஆடிக்கொண்டே அவர் சொல்லி கொடுக்கும் விதம் அனைவரையும் கவர்ந்ததை அடுத்து ஒரு சில நாட்களிலேயே அவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் குவிந்தனர்.
நவம்பர் 2020 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடங்கிய அவருக்கு தற்போது ஃபாலோயர்கள் குவிந்ததுடன் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலம் வருமானம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன இதனை அடுத்து அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது முழு நேரமாக ஆன்லைனில் எக்ஸெல் உள்பட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மற்ற புரடொக்ட்களையும் வகுப்புகளாக எடுத்து சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடைய ஆண் நண்பரும் அவருக்கு இதற்கு உறுதுணையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியுடன் ஒரு செயலை வித்தியாசமாக செய்தால் கண்டிப்பாக அனைவரும் ஆதரவு கிடைக்கும் என்றும் அதன் மூலம் மிகப் பெரிய வருமானம் கிடைக்கும் என்பதற்கு கேட் நார்டன் ஒரு உதாரணம் என்பது குறிப்பிடதக்கது.
https://www.instagram.com/miss.excel/













