தமிழ்நாடு
சின்னம்மா டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்: நடிகை டுவீட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக அரசு கடந்த சில நாட்களாகவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
குறிப்பாக ஜெயலலிதா நினைவிடம் சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில் சசிகலா அந்த நினைவகத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அதிரடியாக மராமத்து பணி என்ற பெயரில் ஜெயலலிதா நினைவகம் மூடப்பட்டது.
அதேபோல அதிமுக அலுவலகம் மூடப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு பயந்து ஒரு சில நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருவதாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். கஸ்தூரி தனது டுவீட்டில் கூறியிருப்பதாவது: நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVIDக்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்’ என்று காமெடியாக பதிவு செய்துள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்களும் காமெடியான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம்.
ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு வுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்!— Kasturi Shankar (@KasthuriShankar) February 8, 2021




















