சினிமா செய்திகள்
50 ரூபாய் சாப்பாடு 10 ரூபாய்க்கு: சத்தமில்லாமல் செய்து வரும் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள்!
Published
12 months agoon
By
Shiva
50 ரூபாய் மதிப்புள்ள சாப்பாடு 10 ரூபாய்க்கு கார்த்தி ரசிகர் மன்றம் விற்பனை செய்து வருவது குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
டிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் பகுதியில் தினமும் வண்டி கடையில் மதியம் ஒரு மணி நேரம் உணவு விற்பனை செய்யப்படுகிறது. சரியாக நூறு பேர்களுக்கு இந்த உணவு வழங்கப்படுவதாகவும் 50 ரூபாய் மதிப்புள்ள இந்த சாப்பாட்டை 10 ரூபாய்க்கு மட்டுமே கார்த்தி மக்கள் மன்றத்தினர் உதவி செய்யும் நோக்கத்தில் தந்து கொண்டிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பல மாதங்களாக இந்த உணவை கார்த்தி ரசிகர் மன்றம் வழங்கி வருகிறார்கள் என்பதும் இந்த உணவகத்தில் ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், மற்றும் கூலி தொழிலாளர்கள் ஏன் ஸ்விகி, சோமடோ தெளிவரி பாய்கள் கூட தினமும் சாப்பிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாபம் நோக்கமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கார்த்தியின் ஆதரவுடன் அவரது ரசிகர் மன்றம் செய்து வரும் இந்த உணவு பணிக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த உணவகம் தினசரி 12.30 மணி முதல் 01.30 மணி வரை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
’வாரிசு’ டிக்கெட் கிடைக்கவில்லை.. முதலமைச்சரை சந்தித்து புகார் கூறிய விஜய்ரசிகர்கள்!
பிரியாணி தான் நம்பர் 1.. 2022ஆம் ஆண்டு ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!
இதற்காகத்தான் அவருக்கு ரசிகரா இருக்கோம்.. விஜய் போட்டோவை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!
ரோலக்ஸ் சாரை பார்ப்பதற்கு பயமாக இருந்தது: ‘விக்ரம்’ படம் குறித்து கார்த்டி
‘விக்ரம்’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த தயாராகும் அஜித் ரசிகர்கள்: ஏன் தெரியுமா?
விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!