சினிமா செய்திகள்
பில்கேட்ஸ்கிட்ட தமிழ்ல்ல பேசினேன்: ‘கடைசி விவசாயி’ விஜய்சேதுபதி!

விஜய் சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சற்று முன்னர் ’கடைசி விவசாயி’ படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் விஜய் சேதுபதியிடம் ஒருவர் பில்கேட்ஸ் இடம் பேசினாயா? என கேட்க நான் பேசினேன், ஆனால் அவர்தான் என்னிடம் பேசவில்லை என்று கூறினார். அவரிடம் நீ தமிழில் பேசினாயா? என இன்னொருவர் கேட்க ’அவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினார், நான் அவரிடம் தமிழில் பேசினேன்’ என்று பதில் கூறுவதுடன் அந்த புரோமோ விடியோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு விவசாயின் கஷ்டங்கள் குறித்து மிகவும் உருக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. காக்கா முட்டை என்ற திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு தான் கடைசி விவசாயி என்பதும் இந்த படம் வெளியானதும் விவசாயிகள் என்றால் யார்? அவர்களுடைய கஷ்டங்கள் என்னென்ன? என அடித்தட்டு மக்களுக்கும் புரியும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் அவருடன் யோகிபாபு, முனீஸ்வரன், காளிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என கருதப்படுகிறது.