சினிமா
பிகில் படத்தில் நடித்த பிரபலமும் லியோவில் இருக்காரா? அம்பலப்படுத்திய யூடியூபர் இர்ஃபான்!

காஷ்மீருக்கு வீடியோ லாக் எடுக்கச் சென்றாரா இல்லை லியோ படத்தில் நடிக்க இணைந்துள்ளாரா இர்ஃபான் பதான் என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சில அப்டேட்களை வீடியோவாகவே கொடுத்து விட்டார் இர்ஃபான்.
பிகில் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்த நடிகர் கதீர் யூடியூபர் இர்ஃபான் எடுத்த வீடியோவில் சிக்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இவரும் லியோ படத்தில் சைலன்ட்டாக நடித்துக் கொண்டிருக்கிறாரா? இப்படி சர்ப்ரைஸ் கேமியோக்களை எல்லாம் அம்பலப்படுத்தி விட்டாரே இர்ஃபான் என சில ரசிகர்கள் அவரை யாரு உள்ளே விட்டது என திட்டியும் அப்டேட் கொடுத்ததுக்கு நன்றி ப்ரோ என்று பாராட்டியும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

#image_title
மேலும், நடிகை பிரியா ஆனந்தும் காஷ்மீரில் லியோ படத்தின் ஷூட்டிங்கில் இருப்பதையும் இர்ஃபானின் லேட்டஸ்ட் வீடியோ அம்பலப்படுத்தி உள்ளது.
லியோ படக்குழுவினர் உடன் எடுத்துக் கொண்ட வீடியோவை இர்ஃபான் இணையத்தில் ஷேர் செய்து தளபதி ரசிகர்களை தலைகால் புரியாத வண்ணம் ஆட்டம் போட வைத்துள்ளார்.
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்படக் காரணமே இர்ஃபான் அங்கே சென்றது தான் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். லியோ படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் ஹேப்பி ஆகி உள்ளனர்.