Connect with us

சினிமா செய்திகள்

நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே! அமெரிக்கா செல்லும் டி.ஆருக்கு கமல் வாழ்த்து

Published

on

மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் இயக்குனர் டி ராஜேந்தரை நலமுடன் திரும்பி வாருங்கள் சகோதரரே என கமல்ஹாசன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு இருப்பதாகவும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதாகவும் இதனால் அவருக்கு வெளிநாடு சென்று தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை அடுத்து சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்ல டி ராஜேந்தர் குடும்பத்தினர் திட்டமிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்பு முன்னதாகவே அமெரிக்கா சென்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார்.

இந்த நிலையில் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து டி ராஜேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கும் டி ராஜேந்தரை நேரில் சந்தித்த உலக நாயகன் கமல்ஹாசன் நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் டி ராஜேந்தர் மற்றும் குறளரசன் ஆகியோருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?