சினிமா செய்திகள்
’சந்திரமுகி 2’ படத்தில் இந்த நடிகரா? அதிகாரபூர்வ அறிவிப்பில் ஆச்சரியம்!
Published
8 months agoon
By
Shiva
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் முதலில் கூறப்பட்டது
ஆனால் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் வேறு சில பிரபலங்களும் இணைந்ததாகவும் சமயத்தில் வெளியான செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. சந்திரமுகி 2 படத்தை பி வாசு இயக்க இருப்பதாக ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதுமட்டுமின்றி முதல் பாகத்தில் தனது நகைச்சுவை நடிப்பால் கலக்கிய வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இந்த படத்திற்கு எம்எம் கீரவாணியின் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தை போலவே சந்திரமுகி 2 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Elated to announce 🤩 our next Big project #Chandramukhi2 🗝️✨
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/NU76VxLrjH— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
You may like
‘சந்திரமுகி 2’ அறிவிப்பு நாளையா? லைகாவின் பரபரப்பு டுவிட்!
கொரோனாவுக்கு பின் வடிவேலு.. வைரலாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ புகைப்படம்…
நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜுக்கு ஒமிக்ரானா? அமைச்சர் மா சுப்பிரமணியன்
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!
லண்டனில் வைகைப்புயல் வடிவேலு: வைரல் புகைப்படம்!
நடிகர் வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’: அட்டகாசமான மோஷன் போஸ்டர்!