சினிமா
துணிவு வில்லனுக்கு ஆண் வாரிசு பிறந்தது.. என்ன பெயர் தெரியுமா?

அஜித்தின் வீரம் படத்தில் அடியாளாக நடித்த ஜான் கொக்கன் பாகுபலி, கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி எனும் வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் ஏகப்பட்ட படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார்.

#image_title
எஸ்எஸ் மியூசிக் விஜே கிரெய்கை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இரண்டாவதாக ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார் பூஜா ராமசந்திரன்.
4 ஆண்டுகளாக பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று திருமண வாழ்க்கையை கொண்டாடி வந்த இருவரும் 10 மாதங்களுக்கு முன்னதாக பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

#image_title
9ம் மாதம் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து முழு கர்ப்ப வயிற்றையும் காட்டியபடி பீச்சில் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தினார் பூஜா ராமசந்திரன். தொடர்ந்து பல முறை பிரெக்னன்ஸி போட்டோஷூட்டை நடத்தி வந்த நிலையில், தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாய், சேய் மற்றும் தன்னுடைய கை விரல்கள் உடன் மூவரும் இணைந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும், நடிகர் ஜான் கொக்கனுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கியான் கொக்கன் எனப் பெயரிட்டு இருப்பதையும் அறிவித்துள்ளார் ஜான் கொக்கன்.