சினிமா செய்திகள்
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!

அஜித் நடித்த ’ஏகே 61’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அதே நாளில் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’ஏகே 61. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில், அனுதீப் இயக்கத்தில், தமன் இசையில் உருவான ’பிரின்ஸ்’ படமும், அதே தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த வீடியோவில் நெல்சன் பாணியில் சில காமெடி காட்சிகளும் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் ’ஏகே 61, ‘பிரின்ஸ்’ ஆகிய இரண்டு படங்கள் தவிர கார்த்தியின் ‘சர்தார்’ மற்றும் ஜெயம் ரவி நடித்த ’இறைவன் ஆகிய படங்களும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. எனவே இந்த ஆண்டு தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு ஜாக்பாட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#PrinceForDiwali 💥 here’s the official announcement video!🇮🇳🕊🇬🇧https://t.co/Bc849MvWP1#Sathyaraj sir @anudeepfilm #MariaRyaboshapka @MusicThaman @manojdft @Premgiamaren @Cinemainmygenes @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 21, 2022