சினிமா செய்திகள்
கடனை திருப்பி கொடுக்கும் வரை தடை: சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தர்வு!

கடனை திருப்பி கொடுக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிப்பதாக சிவகார்த்திகேயன் நடித்த படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்னரே பெரும் கடன் இருந்ததாகவும் இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தனது சொந்த பொறுப்பில் அந்த கடனை ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பின்னர்தான் அந்த படம் ரிலீஸான தாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’அயலான்’ இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த படத்திற்காக டேக் என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் கடன் வாங்கியது. இந்த கடனை இன்னும் திருப்பி செலுத்தாத நிலையில் தங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் வரை இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ’அயலான்’ படத்திற்காக வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கும் வரை இடைக்கால தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது ஜனவரி 3ஆம் தேதி வரை இந்த படத்தை வெளியிட தடை விதிப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இதனால் படக்குழுவினர் தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















