சினிமா செய்திகள்
ஜேம்ஸ்பாண்ட் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.. தோர் நடிகர் ஓபன் டாக்!

தோர் படத்தில் வரும் இடி நாயகனான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை கூறியுள்ளார்.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில் தோர் நடிகராக நடித்துள்ள கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், எண்ட்கேம் படத்திற்கான புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பட புரமோஷன் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், தங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதாவது உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு,
உண்டு என பதிலளித்து அதிர்ச்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ரகசிய உளவாளி ஹீரோ 007 ஆக நடிக்க வேண்டும் என்ற ஆசை இதுவரையில் நனவாகவில்லை என கூறினார்.
மேலும், இதற்காக, கடந்த 2013-ம் ஆண்டில் தான் நடித்த ரஷ் படத்தின் சிடியை ஜேம்ஸ்பாண்ட் பட நிறுவனத்துக்கு ஆடிசனுக்காக அனுப்பியதாகவும், ஆனால், அது ரிஜெக்ட் செய்யப்பட்டதாகவும் தனது மன வருத்தத்தை கூறினார்.
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பட நாயகனுக்காக இந்த நிலைமை என ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
















