சினிமா செய்திகள்
இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் இத்தனை கோடியா?

அவெஞ்சர்ஸ் படம் உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியாகி பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உடைத்து வருகிறது. அண்மையில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் 2வது இடத்தில் இருந்த ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் பாக்ஸ் ஆபிஸை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. விரைவில் முதலிடத்தில் 25000 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருக்கும் அவதாரை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் 402 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். இது முந்தைய ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் செய்த வசூல் சாதனையை விட மூன்று மடங்கு அதிகமாம்.
பாகுபலி, தபாங் ஆகிய இந்திய படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி 1500 கோடி வசூலித்து சாதனை படைத்தன.
இந்நிலையில், இந்தியாவில் மட்டும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது இந்திய திரையுலகையே வாயை பிளக்க வைத்துள்ளது. சீனாவிலும், பல ஆயிரம் கோடி வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கடந்துள்ளது.


















