உலகம்
4 டோஸ் போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் சக்தி வரவில்லை: இஸ்ரேல் ஆய்வகத்தின் அதிர்ச்சி முடிவு!

4 டோஸ் தடுப்பூசி போட்டும் ஒமிக்ரானை எதிர்க்கும் அளவிற்கு எதிர்ப்பு சக்திகள் கிடைக்கவில்லை என இஸ்ரேல் ஆய்வகத்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் 3 நாட்கள் டோஸ் ஊசி செலுத்தப்பட்டு, அதன்பின் சோதனை முயற்சியாக 4வது டோஸ் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் மாடர்னாக தடுப்பூசி, அதன்பின் இரண்டு டோஸ் சைபர் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நான்காவதாக 150 பேர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பு ஊசி செய்து சோதனை செய்யப்பட்டது. 4 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டவர்களின் எதிர்ப்பு சக்தியை ஆராய்ச்சி செய்து பார்த்த போது கொரோனா மற்றும் ஒமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகள் முழுமையாக கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
4 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கும் 4 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் இடையில் ஒப்பீடு செய்து பார்த்ததில் இருவருக்குமே ஒமிக்ரானை எதிர்க்கும் சக்தி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே 4 நோஸ் போட்டாலும் ஒமிக்ரானை எதிர்கொள்ளும் சக்தி மனிதர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பு ஊசி ஒமிக்ரானில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

















