சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன் படத்தை இயக்குகிறேனா?- விளக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆனால், சிவகார்த்திகேயன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவில்லை என முருகதாஸ் தரப்பினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர். இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு உறுதியானது என்றாலும் படம் ஏதும் கமிட் ஆகவில்லை என்றே கூறப்படுகிறது.
முன்னதாகவே சிவகார்த்திகேயனின் மான் கராத்தே திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வழங்கியவர் என்பதால் இந்தக் கூட்டணியினர் மேலும் ஒரு வெற்றிப் படத்தை அளிப்பார்கள் என்றே கருதப்பட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் பணியில் மும்மரமாக செயல்பட்டு வருகிறாராம். சிவகார்த்திகேயன் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.
புத்தாண்டின் போது சிவகார்த்திகேயனின் புதுபட அறிவிப்புகள், டாக்டர், அயலான் வெளியீட்டுத் தேதிகள் வெளியகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


















