Connect with us

கிரிக்கெட்

இன்று ஐபிஎல் ஏலம்.. 85 வீரர்கள் தான் தேவை, ஆனால் போட்டியில் 405 பேர்!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற திட்டமிட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற இருப்பதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 16 வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதை அடுத்து இந்த சீசனில் 10 அணிகள் விளையாட உள்ளன என்பதும் இந்த அணிகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு முழு ஏலம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு மினி வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஏலத்தில் மொத்தம் 87 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பதும் இதில் 39 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மினி ஏலத்தில் 405 வீரர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்களிலிருந்து 87 பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சா ம்கரண் அதிக தொகைக்கு ஏலம் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக அபாரமாக சாம் கரண் விளையாடினார் என்பதும் அவருக்கு தொடர் நாயகன் விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. 24 வயது ஆன சாம் கரணை கோடிக்கணக்கில் ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட பல அணிகள் முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக்ஸ் ஆகியோர்களை ஏலத்தில் எடுப்பதிலும் ஒரு சில அணிகள் தீவிரம் காட்ட உள்ளன. சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஹாரி புரூக்ஸ் மிக அபாரமாக விளையாடி 3 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பென் ஸ்டோக்ஸ் அடிப்படை விலை இரண்டு கோடி ரூபாய் இருக்கும் என்றும் ஹாரி புரூக்ஸ் அடிப்படை விலை ஒன்றரை கோடி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் க்ரூக் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக உள்ளார் என்பதும் அவரது ஆட்டமும் கடந்த சில மாதங்களில் அபாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களை பொறுத்தவரை ஷிவம் மாவி, யாஷ் தாக்கூர் ஆகியோர் ஏலத்தில் நல்ல விலைக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் உள்ளூர் போட்டியில் 5 சதங்கள் அடித்த நாராயணன் ஜெகதீசனை ஏலம் எடுப்பதற்கும் ஒரு சில அணிகள் போட்டி போடக் கூடும் என்றும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனை எடுக்க முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் ஏலம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?